எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு விருது: முதல்வர் வாழ்த்து
சென்னை: இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கோல்கட்டாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது அறிவித்து உள்ளது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு என் பாராட்டுகள்! சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.
தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்
-
2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் ஸ்டாலின்
-
தேர்தல் கூட்டணி பற்றி பேசக் கூடாது: கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி; 102 பேர் காயம்
-
ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு