சாலை நடுவே 'மேன்ஹோல்' மூடி சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார்,- திருவள்ளூர் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற்பூங்காகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்காகன வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட பக்தவத்சலம் நகர் பகுதியில், சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சாலையில் நடுவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை ‛மேன்ஹோல்' மூடி, கடந்த மாதம் உடைந்து சேதமடைந்தது.. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், உடைந்த மேன்ஹோல் மூடியால் விபத்தில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள், உடைந்த மேன்ஹோல் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement