திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு

10


சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் திருடு போன ரூ.5 லட்சத்தை மீட்க உதவிய கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார்,39. இவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார். செல்வகுமார் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.



பஸ் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்ததும் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். செல்வகுமாரை நோட்டமிட்ட அந்த நபர் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.


திருடியவர் பற்றிய சரியான விபரங்களுடன் போலீசில் தெரிவித்து ரூ. 5 லட்சம் பணத்தை மீட்க, கண்டக்டர் கவுதலை, டிரைவர் யோனா டேவிட் உறுதுணையாக இருந்தனர். அவர்களை விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் பரிசு வழங்கி கவுரவித்தார்.

Advertisement