குளித்தலையில் பா.ஜ., ஸ்தாபன தினம்உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்



குளித்தலையில் பா.ஜ., ஸ்தாபன தினம்உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்


குளித்தலை:குளித்தலையில், பா.ஜ., ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில்,'' கட்சியின் செயல்பாடுகள் குறித்து, கிளை உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்வு செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில், 11.6 சதவீத ஓட்டுகள் லோக்சபா தேர்தலில் பெற்றுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வை விட, நாம் அதிக ஓட்டுகள் பெறுவதற்காக ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார்.
குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ஜ., மண்டல தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement