வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்
வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்
குளித்தலை:குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பூவாயிபட்டியில் விநாயகர், காளியம்மன், பாம்பலம்மன், பகவதி அம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்று கடந்த, 9ல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை செய்தனர். நேற்று காலை இரண்டா கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
வேத மந்திரங்கள் மூலம், புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும், தோகைமலை தமிழ் சங்க நிறுவனர் காந்திராஜன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு