தமிழக லோக் ஆயுக்தாநீதிபதிக்கு பாராட்டு



தமிழக லோக் ஆயுக்தாநீதிபதிக்கு பாராட்டு


கிருஷ்ணகிரி:ஊழல் ஒழிப்பு உயர்நிலை அமைப்பான, தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் ராமராஜூவுக்கு, ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஓசூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவசங்கர் தலைமை வைத்தார்.
இதில், டாக்டர் ராமராஜ் பேசியதாவது:நாடாளுமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம், கடந்த 2013ல், இயற்றப்பட்டது. இதன் விளைவாக தேசிய அளவில் ஊழல் ஒழிப்பில் உயர் அமைப்பான லோக்பால் அமைக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் மாநில அளவிலான ஊழல் ஒழிப்புக்கான உயர் அமைப்பான லோக் ஆயுக்தாவை அமைக்காமல் காலம் தாழ்த்தின. உச்ச நீதிமன்றம் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு இறுதி கெடு விதித்த பின்னர், கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்முறையாக, 2019 ஏப்.,ல் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு, பல்வேறு ஊழல் தடுப்பு பணிகளை செய்து வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement