வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில்மழலையர் பட்டமளிப்பு விழா



வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில்மழலையர் பட்டமளிப்பு விழா


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையிலுள்ள வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் இயக்குனரும், பள்ளி முதல்வருமான விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் டாக்டர் தம்பிதுரை எம்.பி., மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி, விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தி பேசுகையில், ''குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு கல்வியுடன் விளையாட்டும் அவசியம். நம் பள்ளி இரண்டையும் சமச்சீராக கொடுத்து, மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கி வருகிறது,'' என்றார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், டாக்டர் சந்தீப் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் முதல்வர்கள், பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

Advertisement