60 சவரன் மாயம் : ஏ.எச்.எம்., புகார்

தஞ்சாவூர்:வீட்டு பீரோவில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக, அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை அளித்த புகார் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா, அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் ஊருக்கு வந்த பாலசுப்பிரமணியன், நகைகளை அடகு வைக்க பீரோவில் தேடிய போது, அவை காணாமல் போனது தெரியவந்தது. சர்மிளா புகாரின்படி, தஞ்சாவூர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement