நாட்டு வெடியை கடித்த எருமை மாடு பலி
செய்யாறு:செய்யாறு அருகே காட்டு பன்றிகளுக்காக வைத்த, நாட்டு வெடிகுண்டை கடித்த எருமை மாடு பலியானது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பெருங்கட்டூரை சேர்ந்தவர் நடராஜன்,60. எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, எருமை மாடுகளை, சுமங்கலி ஏரிக்கரையில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
வீட்டிற்கு சென்ற நடராஜன், சிறிது நேரம் கழித்து எருமை மாடுகளை ஓட்டி வர சென்றார். அப்போது ஒரு எருமை மாடு, வாய் கிழிந்து, பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டை கடித்து, எருமை மாடு பலியானது தெரியவந்தது. நாட்டு வெடி குண்டு வைத்தவர்கள் யார் என மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement