மறுபரிசீலனை நல்லது!

மாநில வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவர் உறுப்பினராக இருப்பதற்கு, வக்ப் திருத்த சட்டம் அனுமதிக்கிறது. இந்த விதி தவறாகத் தோன்றுகிறது. இதற்கு எதிர்ப்பு உள்ளது. மத்திய அரசு இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை வக்ப் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

- மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

மராத்தி மொழி அவசியம்!



மஹாராஷ்டிராவில் உள்ள வங்கிகளில் மராத்தி மொழியை பயன்படுத்தும்படி வங்கிகள் சங்கம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இல்லை எனில் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். அதன் பின் சட்டம் -ஒழுங்கிற்கு வங்கிகளே பொறுப்பு.

- ராஜ் தாக்கரே

தலைவர், மஹா., நவநிர்மாண் சேனா

பிரச்னையில் திரிணமுல்!



திரிணமுல் காங்கிரஸ் கட்சி சமூக விரோதிகளின் கைகளில் உள்ளது. அக்கட்சியை யாராலும் கையாள முடியாது. அவர்களின் எம்.பி.,க்களே பொது இடத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர்; இது, மாநிலத்திற்கு தான் அவமானத்தை ஏற்படுத்துகிறது. இந்த கட்சியை அகற்ற வேண்டும்.

- திலீப் கோஷ்

மூத்த தலைவர், பா.ஜ.,

Advertisement