ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்

சிம்லா; தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஹோலி பார்ட்டிக்கு ஆன ரூ.1.22 லட்சத்தை அரசு தான் செலுத்த வேண்டும் என்று ஹிமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் கட்டாயப்படுத்துவது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
இங்கு தலைமைச் செயலாளராக இருப்பவர் பிரமோத் சக்சேனா. ஹோலி பண்டிகைக்காக ஆடம்பர விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
மாநில அளவிலான 75 அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தும், கொண்டாட்டமும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. உணவு, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்த கொண்டாட்டம் முடிந்த பின்னர் அதற்கான பில்லும் வந்து சேர்ந்தது. ஒட்டுமொத்தமாக ரூ.1.22 லட்சம் செலுத்த வேண்டும் என்று தனித்தனி செலவு விவரங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த செலவுத்தொகையை அரசாங்கம்தான் செலுத்த வேண்டும் என்று கூறி, ஹிமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் பொது நிர்வாகத்துறைக்கு பில்லை அனுப்பி உள்ளது. பில் விவரங்கள் சமூகவலைதளங்களிலும் வெளியானது.
இந் நிலையில் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட பார்ட்டிக்கு. மாநில கருவூலமே கட்டணம் செலுத்த வேண்டுமா என கேள்வி மற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. மேலும், தலைமைச் செயலாளரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனங்களுக்கும் வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,பிக்ரம் சிங் கூறுகையில், மாநிலம் ரூ.1.லட்சம் கோடி கடனில் இருக்கும் போது இந்த ஆடம்பர பார்ட்டி தேவையா- இத்தகைய நிகழ்வுகள் அரசுக்கும், அதிகாரத்துக்கும் மக்கள் பிரச்னைகள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது என்றார்.
கண்டனங்கள் எழுந்து வரும் அதே சூழலில், தனிப்பட்ட பார்ட்டி செலவுத் தொகை ரூ.1.22 லட்சம் இன்னமும் செலுத்தப்படாமல் நிலுவையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








மேலும்
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்