சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!

4

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர் அடைந்துள்ளனர்.


நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நக்சல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். அந்த வகையில் நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மறுபக்கம் நக்சலைட்டுகள் சரண் அடைந்து வருகின்றனர்.


அந்த வகையில் நேற்று பிஜாப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்றும் (ஏப்ரல் 18) சுக்மாவில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர் அடைந்துள்ளனர்.


இது குறித்து, சி.ஆர்.பி.எப்., டி.ஐ.ஜி., ஆனந்த் சிங் கூறியதாவது: பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் இன்று சரண் அடைந்தனர். இதில் இரண்டு பேர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.8 லட்சமும், மற்ற இரண்டு பேர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 லட்சமும் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று சரண் அடைந்த நக்சல்கள் சமூகத்திற்காக சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement