பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு

புதுச்சேரி: இ.சி.ஆரில், திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்று அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரியில் சாலையில் பேனர்கள் வைப்பதால், தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது.

அதையடுத்து, பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

அனுமதியின்றி, இ.சி.ஆர்., சென்டர் மீடியன் மின் கம்பங்களில், திருமண நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் மாலை பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டம் உதவிப் பொறியாளர் ஜெயராஜ், ஆய்வு மேற்கொண்டார்.

திருமண நிகழ்ச்சிக்கு பேனர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

அதே போல, நேற்று முன்தினம் இரவு, கருவடிக்குப்பம், காமராஜர் மணி மண்டபம் அருகே, திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த லாஸ்பேட்டை போலீசார், அனுமதி பெறாமல், போக்குவரத்திற்கு இடையூறாக பேனர் வைத்த, சாரம் பகுதியை சேர்ந்த தினேஷ், 27, என்பவர் மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement