பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடியவர்கள் மீது வழக்கு 

அரியாங்குப்பம்: இடப்பிரச்னை தொடர்பாக, கடை பூட்டை உடைத்து, பொருட்களை சூறையாடிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

குப்பம், மணவெளியை சேர்ந்தவர் பாஸ்கர், 65. இவரது உறவினர் ஆனந்த ரூபி. இவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்.

இவருக்கு சொந்தமான, கடைகள், காலியிடங்கள், தென்னந்தோப்பு ஆகிய இடங்கள் அரியாங்குப்பம், மணவெளி பகுதியில் உள்ளது. இந்த இடங்களை பாஸ்கர் பராமரித்து வரும் நிலையில், மற்றோரு தரப்பினர், அந்த இடங்களை உரிமை கோரிய நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், மணவெளி பகுதியை சேர்ந்த, சரோஜா, ஆனந்தன், தேசிங்கு, மண்ணாங்கட்டி உள்ளிட்ட சிலர், மணவெளி மந்தை திடலில் இருந்த கடையின் பூட்டை உடைத்து பொருட்களை நேற்று சூறையாடியுள்ளனர்.

அதை கேட்ட, பாஸ்கருக்கு அந்த கும்பல், கொலை மிரட்டல் விடுத்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement