சிவகங்கையில் டாஸ்மாக் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை சம்பளம் உட்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் பணியாளர் மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாநில பொது செயலாளர் அரியகுமார் வரவேற்றார்.

மாநில துணை செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் நல சங்க மாநில பொது செயலாளர் கே.ஆர்.,விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார். டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement