குன்றக்குடியில் தேரோட்டம்

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நேற்று நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் இரவு 8:00 மணிக்கு சண்முகநாத பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாணம், பூப்பல்லக்கு, தெப்பத் திருவிழா நடந்தது, முக்கியத் திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5:30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 4:50 மணிக்கு தேரோட்டமும் நடந்தது.
இன்று தீர்த்தவாரியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
Advertisement
Advertisement