அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

தேவகோட்டை: தேவகோட்டை அருகே நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. தேவகோட்டை நகரில் உள்ள மகமாயி அம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டு அங்கிருந்து குதிரைகள், மாடுகள், பொம்மைகள் செய்து ஊர்வலமாக மக்கள் எடுத்துச் சென்றனர்.

நேர்த்திக்கடன் பொம்மைகளை நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடந்தன. நடுமாடு 6., பூஞ்சிட்டு 13., பெரியமாடு 6., கரிச்சான் மாடு 9 ஆகிய ஜோடி மாடுகள் நான்கு பிரிவுகளாக நடந்தன. பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement