திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் தேரோட்டம்

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

ஏப்.2ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.

சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் காலை 9:30 மணிக்கு கிளம்பியது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12:30 மணிக்கு நிலையை அடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Advertisement