இலங்கை அகதிகள் இருவர் திருட்டு வழக்கில் கைது

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள், ரூ.13 ஆயிரம்

திருடிய இலங்கை அகதிகள் கேத்தீஸ்வரன், ரஞ்சித்குமாரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் ஏப்.1ல் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில், பீரோ கதவு உடைத்து ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 7 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, அதே தெருவில் அவரது உறவினர் இந்திரா வீட்டில் ரூ.13 ஆயிரம் திருடுபோனது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுடன், மதுரை கப்பலூர் கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கேத்தீஸ்வரன் 38. இவரது நண்பர் ரஞ்சித்குமார் 25. இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆறே முக்கால் பவுன் தங்க நகைகள் (54 கிராம்), ரூ.1500 யை கைப்பற்றினர்.

Advertisement