50 கிலோ கடல் குதிரை பறிமுதல்: ஒருவர் கைது

ராமநாதபுரம்: அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மரைன் போலீசார் கைது செய்தனர்.
மரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் அடுத்த சித்தார்கோட்டை கடற்கரை கிராமத்தில் மரைன் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஹபீப் என்பவரது வீட்டில், 50 கிலோ கடல் குதிரைகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் 7 சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடல் குதிரைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் ஹபீப்பை கைது செய்து தேவிபட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கடல் குதிரையின் மதிப்பு ரூ.10 லட்சம் ரூபாய் இருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
Advertisement
Advertisement