முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்

போடி: போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். 9 ம் நாளான நேற்று சுவாமி முருகனுக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை மாற்றுதல், மாங்கல்ய பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரம்
திருக்கல்யாண விழாவில் அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் போடி உருமிக்காரன் தெருவை சேர்ந்த ஆறுமுகம், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் இடையே ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஆறுமுகம் ரூ. 51 ஆயிரத்தி 500 வரை ஏலம் கேட்டார். பழனியாண்டவர் என்பவர் ரூ. 52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
Advertisement
Advertisement