பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 30 பயணியர் படுகாயம்

சிக்கமகளூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சிருங்கேரிக்கு நேற்று, 40க்கும் மேற்பட்ட பயணியருடன் மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ், சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா பகுதியில் உள்ள மலை பாதையில் நேற்று சென்றது.
அப்போது, டிரைவர் வெங்கப்பாவின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், அப்பகுதியில் இருந்த ஓட்டு வீட்டின் கூரை மீது பஸ் மோதியது. வீட்டிற்குள் இருந்த கோவில் பூசாரி காயம் அடைந்தார்.
பஸ்சில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் உடனடியாக உதவி செய்து அனைவரையும் மீட்டனர்.
படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்த பஸ் டிரைவர், மேல் சிகிச்சைக்காக கொப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
-
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்
-
2 ஆண்டில் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
50 கிலோ கடல் குதிரை பறிமுதல்: ஒருவர் கைது
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்