ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் பா.ஜ., புகார்

சென்னை: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தேசிய, மாநில மகளிர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பொன்முடிக்கு எதிராக பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தேசிய, மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில், ''ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ள அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.











மேலும்
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது; முதல்வர் ஸ்டாலின்
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு
-
அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்