மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்

4


புதுடில்லி: மத்திய அரசில் பல துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு உள்ளார்.


மத்திய அரசின் பல துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கு நியமனங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.


இதன்படி தற்போது, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அர்விந்த் ஸ்ரீவஸ்தவா, வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


செலவினங்கள் துறை செயலாளராக வும்லோன்மாங் வுல்னம் நியமனம் செய்யப்பட்டார்.

கேபினட் செயலகம், ஒருங்கிணைப்புத்துறை செயலாளராக மனோஜ் கோவிலும்

கலாசாரத்துறை செயலாளராக விவேக் அகர்வாலும்

சந்தோஷ் குமார் சாரங்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை செயலாளர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement