அறுபத்து மூவர் திருவிழா




திரும்பிய பக்கமெல்லாம் அன்னதானம்

அதிலும் வழக்கமான சாம்பார் சாதம்,லெமன் சாதம்,தயிர் சாதம் என்றில்லாமல் சமோசா,பரோட்டா,சப்பாத்தி,ஐஸ்கிரீம் என்று வாரி வழங்கினர்.
Latest Tamil News
இது போக விதவிதமாய் குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், மோர், பானகம், காபி, பால் என்றும் கொடுத்து அசத்தினர்.
Latest Tamil News
இதெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா?

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவில்தான்,பக்தர்களுக்கு பக்தர்கள் மனமும் வயிறும் குளிர உணவுப்பொருளை வாரிவழங்கினர்.
Latest Tamil News
மதியம் மூன்று மணிக்கு துவங்கிய விழாவிற்கு காலை முதலே பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர் இந்த கூட்டம் இரவு 11 மணி வரையிலும் கூட குறையாமலே இருந்ததது.
Latest Tamil News
அறுபத்து மூவர் உலாவின் போது அவருக்கு முன்பாக சிவனடியார்கள் பலர் ஆடியபடி சென்றனர், அதிலும் ருத்ராட்சதத்தாலான லிங்கத்தை தலையில் வைத்துக் கொண்டு ஆடிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது,அதே போல பல்வேறு விதமான கயிலாய வாத்தியங்கள்,பிரம்மாண்டமாக மத்தளம் ஆகியவற்றை இசைத்தபடி சுவாமி பல்லக்குகளுக்கு முன்பாக சென்றனர்.

--எல்.முருகராஜ்

Advertisement