ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

ஈரோடு: ஈரோட்டில் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவர் சிக்கி உள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
ஈரோடு கலெக்டர் அலுவலக பழைய கட்டடம் 4வது மாடியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. இங்கு செயற்பொறியாளர் சேகர் என்பவரும், ஓவர்சியர் சுரேஷ் மணி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒப்பந்தகாரர் ஒருவர் வழங்கிய ரூ.3 லட்சம் லஞ்சம் பெற காத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீசாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்காணிப்பில் இறங்கினர்.
அப்போது செயற்பொறியாளர் சேகர், ஓவர்சியர் ரமேஷ் பணி இருவரும் லஞ்சப்பணம் பெற்றனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும்
-
மாணவரை கடத்தி நகை, பணம் கேட்டு மிரட்டல் ஆட்டோ டிரைவர் உட்பட நால்வர் கைது
-
தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
-
தடுப்பு இல்லாத மலைப்பட்டு குளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
-
கால்வாயில் மண் கொள்ளை 5 பேர் கைது
-
உள்ளூரு... தேறாத பெங்களூரு * பஞ்சாப் அசத்தல் வெற்றி
-
மாயமான சிறுமி 2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு