உள்ளூரு... தேறாத பெங்களூரு * பஞ்சாப் அசத்தல் வெற்றி

பெங்களூரு: பிரிமியர் போட்டியில் உள்ளூரில் (சொந்தமண்) ஏமாற்றிய பெங்களூரு, 5 விக்கெட்டில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.
பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மழையால் தாமதமாக, தலா 14 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டு, போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற பஞ்சாப், பீல்டிங் தேர்வு செய்தது.
கோலி ஏமாற்றம்
பெங்களூரு அணிக்கு கோலி, பில் சால்ட் ஜோடி துவக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய போட்டியின் 4வது பந்தில் சால்ட் (4), அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, 1 ரன் மட்டும் எடுத்து, அர்ஷ்தீப் 'வேகத்தில்' வீழ்ந்தார். பார்ட்லெட் பந்தில் பவுண்டரி அடித்த லிவிங்ஸ்டன் (4), அடுத்த பந்தில் ஆர்யாவிடம் 'பிடி' கொடுத்தார்.
டேவிட் அரைசதம்
தொடர்ந்து விக்கெட் சரிய, அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. இந்நிலையில் பந்தை சுழற்றிய சஹால், ஜிதேஷ் சர்மாவை (2) திருப்பி அனுப்பினார். யான் சென் 'வேகத்தில்' குர்னால் பாண்ட்யா (1), அவரிடமே 'கேட்ச்' கொடுத்தார். ரஜத் படிதரும் 23 ரன்னில் அவுட்டானார். பெங்களூரு அணி 8.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 42 ரன் எடுத்து தத்தளித்தது.
பின் வந்த டிம் டேவிட், அர்ஷ்தீப் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பிரீத் ஓவரில் புவனேஷ்வர் (8), யாஷ் தயாள் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். மீண்டும் வந்த ஹர்பிரீத் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்த டிம் டேவிட், அரைசதம் எட்டினார். பெங்களூரு அணி 14 ஓவரில் 95/9 ரன் எடுத்தது. டேவிட் (50 ரன், 26 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப், யான்சென், சஹால், ஹர்பிரீத் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
வதேரா விளாசல்
பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (16), பிரப்சிம்ரன் (13) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஹேசல்வுட் ஓவரில் ஷ்ரேயஸ் (7), இங்லிஸ் (14) அவுட்டாகினர். ஷசாங்க் (1) நிலைக்கவில்லை. சுயாஷ் பந்துகளில் வதேரா (33*) 2 சிக்சர் அடிக்க, வெற்றி எளிதானது. கடைசியில் ஸ்டாய்னிஸ் (7*) ஒரு சிக்சர் அடிக்க, பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 98/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வீழ்ந்தது பெங்களூரு.
86 விக்கெட்
பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் அர்ஷ்தீப் (86). அடுத்த இடங்களில் பியுஸ் சாவ்லா (84), சந்தீப் சர்மா (73), அக்சர் படேல் (61), முகமது ஷமி (58) உள்ளனர்.
30 இன்னிங்ஸ்
பிரிமியர் அரங்கில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய இந்திய வீரர்களில் பெங்களூரு அணியின் ரஜத் படிதர் இரண்டாவது இடம் பிடித்தார். இவர், 30 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தார். முதலிடத்தில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் (25) உள்ளார். சச்சின் (31), ருதுராஜ் (31), திலக்வர்மா (33) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
* கோலி, தேவ்தத் படிக்கலுக்குப் பின் பெங்களூரு அணிக்காக 1000 ரன் எடுத்த வீரர் ஆனார் ரஜத் படிதர்.
முதல் ஓவரில்...
நடப்பு பிரிமியர் தொடரில் முதல் ஓவரில் 2 அல்லது அதற்கும் மேல் விக்கெட் சாய்த்த ஆறாவது பவுலர் ஆனார் பஞ்சாப்பின் அர்ஷ்தீப் சிங். சென்னையின் கலீல் அகமது (4), ராஜஸ்தானின் ஆர்ச்சர் (3), மும்பையின் பவுல்ட் (2), லக்னோவின் ஷர்துல் தாகூர் (2), முகமது சிராஜ் (2) முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.
மழையால் தாமதம்
பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. மைதானத்தில் நீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை இருந்தாலும், இங்கு பொருத்தப்பட்டுள்ள 'சப் ஏர் சிஸ்டம்' தானாக செயல்பட்டு, ஈர்ப்பு விசையை விட 36 சதவீதம் அதிக வேகத்தில் நீரை உறிஞ்சி விடும். இதனால் மழை நின்ற அரை மணி நேரத்தில் மைதானம் தயாரானது. இருப்பினும் 7:30 மணிக்குப் பதில் 2 மணி நேரம், 15 நிமிடம் தாமதமாக துவங்கியது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது