தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை துவக்க உள்ளது. இதற்காக வரும், 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான மூன்று நாட்கள், சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.
* தேனாம்பேட்டை வழியாக சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலை வலதுபுறம் திரும்பி, நந்தனம் வழியாக செல்லலாம்
* சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக அண்ணாசாலை - செனடாப் சாலை வழியாக, சேமியர்ஸ் சாலை செல்லலாம்
* செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும், ஜி.கே.எம்.,பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ரத்னா நகர் பிரதான சாலையும், சென்டாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும்; அண்ணாசாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை
அண்ணாசாலையில் இருந்து செனடாப், 1வது தெரு வழியாக வாகனங்கள் செல்லலாம். ஆனால் செனடாப், 1வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை
* கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும். அவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம்.,பாலம் சர்வீஸ் சாலை வழியாக, டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு வழியாக செல்லலாம்
* சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்ம் அதைச் சுற்றியுள்ள ஒரு வழிப்பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து உதவி கமிஷனர் பாஸ்கர் கூறுகையில், ''செனடாப் சாலையில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சாலை தடுப்புகள் அகற்றப்பட்டு வருகிறது,'' என்றார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது