தடுப்பு இல்லாத மலைப்பட்டு குளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாகாணியம் செல்லும் சாலையோரம் உள்ள மலைப்பட்டு கங்கை அம்மன் கோவில் குளத்திற்கு, தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், மலைப்பட்டில் இருந்து மாகாண்யம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.
மாகாணியம், அழகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் இந்த சாலையின் வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் உள்ள மலைப்பட்டு கங்கையம்மன் கோவில் குளத்திற்கு தடுப்பு இல்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் செல்லும் போது, குளத்தில் தவறி விழும் சூழல் உள்ளது.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, தடுப்பு இல்லாத குளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி, வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், சாலையோரம் உள்ள குளத்திற்கு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது