கர்நாடக ராஜ்பவனில் அசைவத்துக்கு தடை

ஹாசன்: “ராஜ் பவனில் அசைவ உணவுக்கு முற்றிலுமாக தடை விதிக்ககப்பட்டுள்ளது. யார் வந்தாலும் சைவ உணவு வழங்குகிறோம்,” என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.

ஹாசன் மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகாவின், ஷ்ரவண பெளகோலாவின் ஜெயின் மடத்தில், மஹாவீர் ஜெயந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

ராஜ்பவனில் அசைவ உணவுக்கு, முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜ்பவனுக்கு யார் வந்தாலும், சைவ உணவு பரிமாறுகிறோம். வெளிநாட்டவருக்கும் அதே உணவு வழங்குகிறோம்.

ஜெயின் மதம் அகிம்சையை போதிக்கிறது. ஆனால், இந்த திருத்தலத்தின் சுற்றுப்பகுதிகளில் இறைச்சிக் கடை, மதுபானக் கடைகள் அதிகம் உள்ளன. மாநில அரசு இந்த விஷயத்தை தீவிரமாக கருத வேண்டும். இத்தகைய கடைகளை அகற்ற, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

Advertisement