போபண்ணா ஜோடி தோல்வி

மான்டி கார்லோ: ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது.
மொனாக்கோவில், ஏ.டி.பி., மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ, பிரான்சின் மானுவல் கினார்ட் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-4 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' ஏமாற்றிய இந்தியா-அமெரிக்க ஜோடி 7-10 என இழந்தது. முடிவில் போபண்ணா, ஷெல்டன் ஜோடி 2-6, 6-4, 7-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐபோன், லேப்டாப் திருடிய நபர் கைது
-
பெசன்ட் நகர், மூலக்கொத்தளத்தில் விரைவில் உடல் பாதுகாப்பு மையம்
-
வீட்டுவசதி வாரியம் கட்டவுள்ள 12 அடுக்கு மாடி அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி
-
மனைவிக்கு முடி வெட்டி சித்ரவதை இரண்டாவது கணவருக்கு 'காப்பு'
-
ஆதி திராவிடர் நல துறை துணை செயலர் கோர்ட்டில் ஆஜர்
-
ஓ.எம்.ஆரில் புத்தக திருவிழா துவக்கம்
Advertisement
Advertisement