ஐபோன், லேப்டாப் திருடிய நபர் கைது

ஆலந்துார், பரங்கிமலை, நசரத்புரம், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவின், 27, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறார்.

கடந்த 17ம் தேதி காலை, வீட்டில் வைத்திருந்த 'ஐபோன், லேப்டாப்' ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்படி பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா வாயிலாக குற்றவாளியை தேடினர். இதில், திருட்டில் ஈடுபட்டது, அதே பகுதியைச் சேரந்த கவுதம், 25, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருடிய ஐபோன், லேப்டாப் ஆகியவற்றை மீட்டனர்.

கவுதம் மீது தாம்பரம், சங்கர் நகர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், எழும்பூர் மற்றும் கடம்பத்தூர் ஆகிய காவல் நிலையங்களில், 10 திருட்டு வழக்குகள் உள்ளன.

Advertisement