பெசன்ட் நகர், மூலக்கொத்தளத்தில் விரைவில் உடல் பாதுகாப்பு மையம்
சென்னை, சென்னை, வேலங்காடு மயான பூமியில், இறந்தோர் உடல் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் இறந்தோரின் உறவினர்கள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் வரையில், உடல்கள் தற்காலிகமாக குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற மையங்கள், தெற்கு வட்டாரத்தில் பெசன்ட் நகர் மயான பூமியிலும், வடக்கு வட்டாரத்தில் மூலக்கொத்தளத்திலும் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
சென்னை போன்ற நகரங்களில், இறந்தோரின் உடல்களை பாதுகாக்கும் தேவை அதிகரித்துள்ளது.
முதற்கட்டமாக வேலங்காடு மயான பூமியில் அமைக்கப்பட்டு, வரவேற்பு இருந்ததால், பெசன்ட் நகர் மற்றும் மூலக்கொத்தளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.
அதேபோல், மயான பூமிகளின் சுகாதாரத்தை பாதுக்கும் வகையில், திறந்தவெளி இடங்களாக இருக்கும் பகுதிகளில், 6 அடி இடைவெளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். மேலும், சுகாதாரமும் அங்கு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது