மனைவிக்கு முடி வெட்டி சித்ரவதை இரண்டாவது கணவருக்கு 'காப்பு'

எண்ணுார், எண்ணுாரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரேம், 33, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்தாண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டு, மேடவாக்கத்தில் வசித்து வந்தனர். பிரேமிற்கு ஏற்கனவே திருமணமாகி, இரு பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்பெண் கோபித்துக்கொண்டு, எண்ணுாரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
அன்று முதல், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளம் வழியாக, அப்பெண்ணிற்கு பிரேம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை, வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன், வீட்டருகே உள்ள சர்ச்சிற்கு சென்ற அப்பெண்ணை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட பிரேம், காரில் வந்து அழைத்து சென்றுள்ளார். திருவான்மியூரில் உள்ள ஹோட்டலில் இருவரும் தங்கினர். மறுநாள் சோழிங்கநல்லுாரில் வீடு பார்க்கலாம் எனக்கூறி, காரில் அழைத்து சென்ற அவர், இளம்பெண்ணை தாக்கியுள்ளார். மேலும், தலைமுடியை வெட்டி சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஹோட்டலுக்கு அழைத்து வந்து மீண்டும் அப்பெண்ணை தாக்கியுள்ளார். மொபைல் போன் வழியே பெண்ணின் தாயை தொடர்பு கொண்ட பிரேம், 'உங்கள் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய போகிறேன்' என, மிரட்டியுள்ளார்.
பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, எண்ணுார் மகளிர் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நேற்று, பிரேமை கைது செய்தனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது