கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி
ஆவடிமணலி, சாலமன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுமித்ரா, 30. தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கார்த்திக், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். நேற்று மதியம், அவரது ஆட்டோவில் நண்பர்களான சுகுமார், 29, சூர்யா, 25, வேல்முருகன், 25, ஆகியோருடன், ஆவடி, கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். மாலை 4:55 மணியளவில், அங்கு அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென கார்த்திக் மாயமானார். அவரது நண்பர்கள், ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கோவில் பதாகை, அசோக் நகர் அருகில் கார்த்திக் உடலை மீட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை
-
காஞ்சியில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்
-
ஹோலி கொண்டாட ரூ.1.22 லட்சம் செலவு: அரசு பணத்தில் தலைமை செயலர் 'தாம் துாம்'
-
'ஸ்பா'வில் பணம், நகை பறிப்பு 'போலி' போலீசார் அட்டகாசம்
-
5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்
-
சத்தீஸ்கரில் 11 பெண்கள் உட்பட 33 நக்சல்கள் போலீசில் சரண்
Advertisement
Advertisement