5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்

வாடிப்பட்டி:மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சூரியபிரகாஷ், 30. லாரி ஷெட்டில் வேலை செய்தார். இவரது மனைவி பிரியா, 25. மகள்கள் சோபா ஸ்ரீ, 3 மற்றும் ஒன்பது மாத மகள் ரியாஸ்ரீ உள்ளனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வாடிப்பட்டியில் இருந்து டூ - -வீலரில் ஊர் திரும்பினார்.
ஆண்டிப்பட்டி பங்களா அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியின் பின்சக்கரத்தில் டூ - வீலருடன் சிக்கினார். அவரது உடல் 5 கி.மீ., வரை இழுத்துச் செல்லப்பட்டது.
கட்டப்புளி நகர் பகுதியில் வந்தபோது, துக்க வீட்டில் இருந்தவர்கள், லாரியில் உடல் சிக்கி இருப்பதைக் கண்டு, டூ - வீலரில் பின்தொடர்ந்து சென்று தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகே டிரைவருக்கு தெரியவந்தது. இடதுகால் துண்டான நிலையில், சூர்யபிரகாஷ் உடல் மீட்கப்பட்டது. அதிகாலை எங்கு சென்றார், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து, சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது