புதுப்பட்டு சாலை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சித்தாமூர்:சூணாம்பேடு அடுத்த ஆரவல்லிநகர் பகுதியில், புதுப்பட்டு வழியாக திண்டிவனம் செல்லும் சாலையை இணைக்கும் 1.5 கி. மீ., புறவழிச்சாலை உள்ளது.
இச்சாலை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. புதுப்பட்டு, விளாம்பட்டு, புதுக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது.
இச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 89 லட்சத்தில், சாலை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது.
சாலை சீரமைக்கும் பணி மந்தமாக நடப்பதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது