தனியார் பஸ் - டேங்கர் லாரி மோதல் சாலையில் நின்றிருந்த வாலிபர் பலி
காரிமங்கலம், ஏப். 19
காரிமங்கலம் அருகே, தனியார் பஸ் மற்றும் டேங்கர் லாரி மோதிய விபத்தில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த -வாலிபர் பலியானார்; 17 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, தனியார் பஸ் ஒன்று கிருஷ்ணகிரியில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி, வந்து கொண்டிருந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பெரியாம்பட்டி ஊருக்குள் செல்வதற்காக பஸ்சை டிரைவர் திருப்பிய போது, எதிர் திசையில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி, பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையோரம் நின்றுகொண்டிருந்த இண்டமங்கலம் அடுத்த, கன்னிப்பட்டியை சேர்ந்த சூர்யா, 16, சம்பவ இடத்தில் பலியானார். விபத்தில் காயமடைந்த, 17 பேரை காரிமங்கலம் போலீசார் மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது