கடையை உடைத்து திருட்டு திண்டிவனத்தில் துணிகரம்

திண்டிவனம், ; திண்டிவனத்தில் பூட்டி யிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடை ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீ சார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்சிங், 35; திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபார கடை வைத்துள்ளார். பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஹரசன்ராம், 30; கடை மேலாளராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வழக்கம் போல கடையை பூட்டி சென்றனர்.

கடை மேலாளர் ஹரசன்ராம் நேற்று காலை வழக்கம்போல் கடை திறக்க வந்தபோது, கடை ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையின் மேஜை டிராயரில் இருந்து ரூ. 1 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தது. திண்டிவனம் டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செல்வதுரை விசாரணை நடத்தினார்.

கடையை பூட்டிவிட்டு வெளியே செல்லும் போது, மின் இணைப்பை நிறுத்தியதால் கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி., கேமராகள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.

இதனால் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் யார் என்பதை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement