ராமர் கோவிலில் சீதா திருக்கல்யாணம்

குமாரபாளையம், ஏமாரபாளையம் ராமர் கோவிலில், ராம நவமியையொட்டி, கடந்த, 6 முதல் சுவாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில், தினசரி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. நேற்று, சீதா திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடந்தது.


இதையொட்டி, பக்தர்களின் பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சி, தினசரி நடந்து வருகிறது. சீதாதேவி திருக்கல்யாண திருவீதி உலாவில், சிறுமியர், பெண்கள் பங்கேற்ற கோலாட்டம் நடந்தது. விட்டலபுரி, பஸ் ஸ்டாண்ட், இடைப்பாடி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா நடந்தது. வழியெங்கும் பக்தர்கள், தண்ணீர் ஊற்றி, மலர்கள் துாவி, ராமர், சீதாதேவி சுவாமிகளை வரவேற்றனர்.

Advertisement