சேதமான ரேஷன் கடை கட்டடம் பொருட்கள் பாதுகாப்பில் சிக்கல்

அச்சிறுபாக்கம்:சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்புலி ஊராட்சியில், 20 ஆண்டுகளுக்கு முன், நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. 200 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சில பகுதிகள் இடிந்து விழுந்து வருகிறது.

மழைக்காலங்களில் சுவர்களில் இருந்து நீர்க்கசிவு ஏற்பட்டு பொருட்கள் வீணாகின்றன.

எனவே, பழைய நியாய விலை கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்றி, பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டடம் கட்டி தர, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement