சிலுவை பாதை ஊர்வலம்

செஞ்சி,;சத்தியமங்கலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினமாக கடைபிடித்து வருகின்றனர். அதையொட்டி, செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. முக்கிய சாலைகள் வழியாக ஜெபத்துடன் சிலுவையை சுமந்தவாறு ஊர்வலம் நடந்தது. புனித அந்தோணியார் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி சிறில் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதன் நிறைவாக கிறிஸ்தவர்கள் சிலுவையில் முத்தமிட்டு, பாத வழிபாடு செய்தனர்.

Advertisement