ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மரங்களும் அடியோடு சாய்ப்பு

வாடிப்பட்டி:
வாடிப்பட்டியில் மதுரை -- திண்டுக்கல் மெயின் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

இந்த ரோட்டில் ஓட்டல், பெட்டிக் கடைகள், வீடுகள், கட்டடங்களின் தாழ்வாரங்கள், படிக்கட்டுகள் என ஆக்கிரமிப்புகள் இருந்தன. தனிநபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்புகளை உரிமையாளர்களே அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியும் யாரும் முன்வரவில்லை. இதனால் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ரோட்டோரம் இருந்த வேம்பு உள்ளிட்ட மரங்களும் அகற்றப்பட்டன. 2018ல் வாடிப்பட்டி, 2024ல் அலங்காநல்லுார், சில மாதங்களுக்கு முன் சோழவந்தான் என பல பகுதிகளில் இதுபோல ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

Advertisement