பால்குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் கரியப்பா நகர் பாலமுருகன் கோவிலில், 35ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது.

இதையொட்டி காலையில், கோமுகி நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்தல் வழிபாட்டில்,

பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, காவடி எடுத்து கச்சேரி சாலை, சேலம் சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து பகலில் சுவாமிக்கு பால்குட அபிேஷகம் செய்து வைத்து, தங்ககவசம் சாற்றப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது.

Advertisement