பங்காரம் லஷ்மி கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி, ;கள்ளக்குறிச்சி அருகே, கல்லுாரி மாணவர் சேர்க்கை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் பழனியம்மாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் சேர்க்கை துவக்கி வைக்கப்பட்டு, கல்வி கட்டணச் சலுகைகள் குறித்த தகவல்கள், சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன், துணை முதல்வர் சசிகலா வாழ்த்தி பேசினர். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.

Advertisement