வட்ட சட்ட பணிகள் குழு மரக்கன்றுகள் நடும் விழா

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார்.

கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வன அலுவலர் ராஜா, நீதிபதிகள் சையத் பர்கத்துல்லா, ஸ்ரீராம், தனசேகரன், ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட இலுப்பை, பூவரசு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை நீதிபதிகள் மற்றும் கலெக்டர் ஆகியோர் நட்டனர்.

இதில் சட்ட பணிக்குழு வக்கீல்கள், அரசு வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement