'அண்ணாமலையை மாற்றுங்கள் என பழனிசாமி சொல்லவில்லை'
மதுரை : ''தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதில் எங்களுக்கு சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை. அண்ணாமலையை மாற்றுங்கள் என பழனிசாமியும் சொல்லவில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக அமைச்சர் பொன்முடி பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
பொன்முடி இழிவாக பேசியதற்கு முதன் முதலில் எதிர்த்து பேசியது நான்தான். அமைச்சர் பதவியே 'ஓசி'தான். அந்த பதவியை வைத்துக்கொண்டு அரசு பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தி மக்களை திசை திரும்புகிறார்கள். இது ஏமாற்று வேலை. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து என்றார்கள். நாங்களும் ஏதேதோ நம்பினோம். கையெழுத்து வாங்கினார்கள். சேலம் மாநாட்டில் அந்த கையெழுத்தை காலில் வைத்து மிதித்ததுதான் மிச்சம்.
பா.ஜ.,வுடன் கூட்டணி என ஊடகங்கள் கற்பனை வசனங்கள் எழுதுகின்றன. எங்கள் பொதுச்செயலாளர் சொன்னாரா. அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அவரை யாரும் கட்டாயப்படுத்தி டில்லிக்கு கூப்பிடவில்லை. கூட்டணி குறித்து அவர் பார்த்துக்கொள்வார். தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும். அதெல்லாம் தேர்தல் வியூகம். அண்ணாமலை மாற்றப்படுவதில் எங்களுக்கு சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை. அண்ணாமலையை மாற்றுங்கள் என பழனிசாமியும் சொல்லவில்லை.
ஜெயலலிதா எட்டடி பாய்ந்தார். பழனிசாமி 16 அடி பாய்வார். ஜெயலலிதா சிங்கம். பழனிசாமி சிங்ககுட்டி. அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பா.ம.க., குடும்ப விவகாரம். அதை பற்றி பேச விரும்பவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். இவ்வாறு கூறினார்.

மேலும்
-
ரோட்டோர வாகனங்களால் நெருக்கடி: நடைபாதைக்கு நிதி ஒதுக்கியும் கிடப்பில் பணிகள்
-
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
-
திருநெல்வேலி மாநகராட்சியில் செப்டிக் டேங்க் லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
-
வட்ட சட்ட பணிகள் குழு மரக்கன்றுகள் நடும் விழா
-
சபரிமலையில் புதிய பஸ்ம குளம் 6 மாதத்தில் முடிக்க திட்டம்
-
புகார் பெட்டி