வீட்டில் கஞ்சா செடி : மத்திய அரசு அதிகாரி கைது
திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்தில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்ததாக மத்திய அரசு அதிகாரி ஒருவரை கலால் துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கமலேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கலால் துறையினர் சோதனை நடத்தினர். மத்திய அரசின் தணிக்கை துறை அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று அதிகாரிகள் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் கலால் துறையினர் சோதனை நடத்திய போது எதுவும் சிக்கவில்லை. மொட்டை மாடிக்கு சென்ற போது அங்கு ஒரு தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் மத்திய உதவி கணக்கு தணிக்கை அதிகாரி ஜிதின் என்பவர்தான் கஞ்சா வளர்த்தது தெரியவந்தது. அவரை கலால் துறையினர் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement