கார்--லாரி மோதல்: 3 பேர் பலி

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே கார், லாரி மோதிய விபத்தில் காரில் வந்த 3 பேர் பலியாகினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி கருங்குளத்தை சேர்ந்த 6 பேர் புனித வெள்ளியை முன்னிட்டு கேரளா மாநிலம் தோமையார் சர்ச் சென்று விட்டு ஊர் திரும்பினர். வேடசந்துார் அய்யனார் கோயில் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மீது மோதியதில் கார் நொறுங்கியது. இதை ஓட்டி வந்த டிரைவர் சின்னப்பன் 34, பயணி அகஸ்டின் பிரபு 26, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். காயமடைந்த ராபர்ட் 32, அற்புதராஜ் 30, மில்டன் ஜெயக்குமார் 32, ஜான் கென்னடி 35, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ராபர்ட் 32, இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement