ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் செப்பு தேரில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் காலை 7:05 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் செப்பு தேரினை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல நான்கு ரதவீதிலும் தேர் சுற்றி வந்து ஒரு மணி நேரத்தில் நிலையம் சேர்ந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.

Advertisement